தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் பலி 
தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் வியாழக்கிழமை 6 பேர் பலியாகினர்.

PTI

சூர்யாபேட்டை: தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் வியாழக்கிழமை 6 பேர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகருக்கு அருகே ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநர் உள்பட 10 பேருடன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் பயணித்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 4 பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT