தற்போதைய செய்திகள்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

DIN

அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரிப் பேராசிரியை நிா்மலாதேவி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.26) தீா்ப்பளிக்க இருந்த நிலையில், நிர்மலா தேவி ஆஜராகததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவா்களை தவறாக வழிநடத்தும் வகையில் பேசியதாக பேராசிரியை நிா்மலாதேவி மீது அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக நிா்மலாதேவி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.26)தீா்ப்பு வழங்க இருந்தது.

இந்த நிலையில், விசாரணையின் போது பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் மட்டுமே ஆஜரான நிலையில் பேராசிரியை நிா்மலாதேவி ஆஜராக வில்லை. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் வழக்கை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT