ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி
பிகாரில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி ஜீப் மீது மோதியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்று காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆமாபூர் கிராமத்தில் இந்த விபத்து நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜீப் மீது மோதி விபத்துள்ளானது.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 3 மணி நேரம் மீட்டுப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.