சாத்தூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: புழல் சிறை காவலர் பலி, 6 பேர் காயம்
சாத்தூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சென்னை புழல் சிறை காவலர் பலியானது தொடர்பாக....
சாத்தூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சென்னை புழல் சிறை காவலர் பலியானார், 6 பேர் காயம்டைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னை மாதவரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வரை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்தை சென்னையை சேர்ந்த அபிராம்பாரத் (27) என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சாத்தூர் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்து 6 பயணிகள் காயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த லெனின் (43) சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த லெனின் புழல் சிறையில் சிறை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் அபிராம் பாரத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக வேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Accident near Sattur: Omni bus collides with a lorry; Puzhal prison guard killed, 6 injured
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.