தற்போதைய செய்திகள்

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.7.50 உயா்ந்து, ரூ.1,817-க்கு விற்பனையாகிறது.

இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் 2024 முதல் மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 12 மாதங்களில், ஆகஸ்ட் 2023 முதல் ஜூலை 2024 வரை ₹100 குறைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் ₹100 விலை குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT