தற்போதைய செய்திகள்

ஃபிலிம் ஃபேர் விருதுகளை குவித்த சித்தா, பொன்னியின் செல்வன் 2

சித்தா, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன.

DIN

சித்தா, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம் ‘சித்தா’. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணனும், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் அமைத்திருந்தனர். குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

ரூ 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சித்தா திரைப்படம் 7 ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்-சித்தார்த் (விமர்சகர்கள் விருது), சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய 7 பிரிவுகளில் படத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இதேபோல் பொன்னியின் செல்வன் 2வில் நடித்ததற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுதவிர, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை வடிவமைப்பாளர் ஆகிய பிரிவுகளிலும் இப்படம் விருதினை தட்டிச்சென்றுள்ளது. மேலும் மாமன்னன் படத்தில் நடித்த ஃபஹத் பாசில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அதேசமயம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா படம் 6 ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT