சைத்ரா ரெட்டி 
தற்போதைய செய்திகள்

புதிய தொழில் ஆரம்பித்த கயல் தொடர் நாயகி!

நிலவரசி என்ற புதிய புடவைக் கடையை திறக்கும் சைத்ரா ரெட்டி.

DIN

கயல் தொடர் நாயகி நடிகை சைத்ரா ரெட்டி சொந்தமாக புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இதனைத் தொடர்ந்து யாரடி நீ மோகினி தொடரிலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் அஜித்தின் வலிமை படத்தில் சைத்ரா நடித்திருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் டிஆர்பியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

தற்போது, தொடரில் கயலுக்கு திருமணம் நடைபெறுமா? நடக்காதா? என்பதை நோக்கி கதை நகர்ந்து வருகிறது.

நடிகை சைத்ரா ரெட்டி பால் பண்ணை ஒன்றை ஆரம்பித்து இருப்பதாக முன்னதாகத் தெரிவித்து இருந்தார். இதுதவிர இவர் அழகு கலைஞராகவும் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி புடவைக் கடை தொழிலை ஆரம்பித்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இவர் நிலவரசி என்ற இவரது புடவைக் கடையின் திறப்பு விழா வரும் ஆக. 9 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விடியோவையும் சைத்ரா ரெட்டி வெளியிட்டுள்ளார். இவர் தொடங்கவுள்ள புதிய தொழிலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளித் திரை நடிகைகளான சினேகா உள்ளிட்ட சில நடிகைகள் புடவைக்கடை நடத்தி வரும் நிலையில், சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புதிய தொழிலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT