சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையாகிறது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மேலும் எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,300 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளயின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டு உயரத் தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும் விற்பனையாகிறது.

அதுபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.87,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT