கருணாநிதி நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் 
தற்போதைய செய்திகள்

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும்

DIN

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்!

ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு!

இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT