உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

முதுநிலை நீட் தேர்வு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் விற்பனை தொடர்பான பொதுநலன் வழக்கு.

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை நாளை(ஆக. 9) உச்ச நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. அதன்படி, நிகழாண்டு நீட் தோ்வு வரும் 11-ஆம் தேதி நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.

நீட் முதுநிலை தோ்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவியது.

ஏற்கெனவே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிந்தது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முதுநிலை நீட் தோ்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வழக்கை ஏற்றுக் கொண்ட தமைமை நீதிபதி அமர்வு, இவ்வழக்கின் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

SCROLL FOR NEXT