முகப்பு
நடிகர் விஜய்
தற்போதைய செய்திகள்

திருச்சி பொன்மலையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு: அனுமதிக் கோரி கடிதம்!

செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகக் தகவல்.

தற்போதைய செய்திகள்

திருச்சி பொன்மலையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு: அனுமதிக் கோரி கடிதம்!

செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகக் தகவல்.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 9:56 AM
நடிகர் விஜய்
பகிர்:

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே திடலில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அக்கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படாததால், தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த திடல் 8 ஏக்கர் பரப்பளவு மட்டுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் மாநாடு நடத்த வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

இந்த முதல் மாநில மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மாநாட்டை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்வையிட்டு வருவதால், அதிகாரப்பூர்வ தகவல் கட்சி தலைமையில் இருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →