இரவு 10 மணி வரை மழை... சென்னை, 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
தற்போதைய செய்திகள்இரவு 10 மணி வரை மழை... சென்னை, 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஆக. 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.