மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு(கோப்புப்படம்) dotcom
தற்போதைய செய்திகள்

வக்ஃப் வாரிய திருத்த மசோதா: கூட்டுக்குழு அமைப்பு!

31 பேர் கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு உத்தரவு.

DIN

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

31 பேர் கொண்ட கூட்டுக்குழுவை மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அமைத்துள்ளார். மக்களவையில் நேற்று(ஆக. 8) வக்ஃப் வாரிய அதிகாரங்களை திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததனர்.

இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆ. ராசா, ஓவைசி, தேஜஸ்வி சூர்யா, இம்ரான் மசூத் உள்ளிட்ட 21 பேர் மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

திமுக, காங்கிரஸ், சமாஜவாதி, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இக்குழுவில் உள்ளனர். பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பரிசீலிக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT