கொலை செய்யப்பட்ட மாமனார் சின்னப்பன் - கைது செய்யப்பட்ட மருமகன் தாமஸ் 
தற்போதைய செய்திகள்

மாமனார் வெட்டிக்கொலை! மருமகன் கைது

மன்னார்குடி அருகே மதுப் போதையில் மாமனாரை அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மருமகனை சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுப் போதையில் மாமனாரை அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மருமகனை சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை நல்லபிள்ளான் தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் மகன் சின்னப்பன் (74). இவருக்கு இரண்டு மகள்கள்

உள்ளனர். இளைய மகள் சமனஸ்மேரியை அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் மகன் தாமஸ் (46) என்பவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மதுப் போதைக்கு அடிமையான தாமஸ், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட தகராறு அடுத்து மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள அவர் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து, மனைவியை அழைத்து வருவதற்காக பலமுறை மாமனார் வீட்டுக்கு தாமஸ் சென்றுள்ளார். ஆனால் அவருடன் வருவதற்கு மனைவி மறுத்துவிட்டு தந்தை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திருமக்கோட்டை கடைவீதி பகுதியில் சின்னப்பன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை மதுபோதையில் வழிமறித்த தாமஸ் தன்னிடமிருந்து மனைவியை பிரிப்பதற்கு காரணமாக இருந்தது நீங்கள் தான் எனக் கூறி தகராறில் ஈடுப்பட்பதுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்னப்பனை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்து கீழே விழுந்த சின்னப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு. பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலே அவர் அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய தாமஸை தேடி வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் (பொறுப்பு) திருமக்கோட்டை காவல் ஆய்வாளர் (பொறுப்பு)சந்தான மேரி, காவல் சார்பாய்வாளர் பிரேம்நாத் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், மாமனாரை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி தாமஸை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT