மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட். 
தற்போதைய செய்திகள்

சத்யராஜ் நடிக்கும் வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆக.16-ல் வெளியாகிறது.

DIN

சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ் தற்போது நாயகனாக நடிக்காமல் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி, லவ் டுடே என இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

முன்னதாக, ஆக்சன் த்ரில்லர் படமாக உருவான வெப்பன் படத்தில் வசந்த் ரவியுடன் சத்யராஜ் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சத்யராஜ் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

இந்த வெப் தொடரில் சத்யராஜ் உடன், சீதா, ரேகா, லிவிங்ஸ்டன், ரக்‌ஷன், ரேஷ்மா உள்ளிடோரும் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

’மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆக.16-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT