முகப்பு
செய்திகள்

இன்று முதல் ஒளிபரப்பாகும் நாகினி தொடரின் புதிய பாகம்!

நாகினி தொடர் ஒளிபரப்பு குறித்து...

Updated On : 16 மார்ச், 2026 at 3:39 PM
நாகினி தொடர் - படம்: எக்ஸ்
பகிர்:

நாகினி தொடரின் புதிய பாகம் விஜய் தொலைக்காட்சியில் இன்று(மார்ச் 16) முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

நாகினி தொடர் ஹிந்தி மொழியில் ஏக்தா கபூர் தயாரிப்பில் மௌனி ராய், அர்ஜுன் பிஜ்லானி உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்டது. பின்னர் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சன் தொலைக்காட்சியில் நாகினி தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமடைந்தது. தற்போதும் நாகினி தொடருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

நாகினி என்ற பாம்பு உருவ பெண்ணை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடரின் கதையானது, பழிவாங்குதல் மற்றும் நாகமணியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை பிரதானப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தத் தொடரின் முதல் பாகம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், அடுத்தடுத்த பாகங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்தது.

தற்போது, நாகினி தொடரின் 7வது பாகம், முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பு செய்யப்படுகிறது. இன்று முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு நாகினி தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகினி தொடர் மாயஜாலம் கலந்த திகில் தொடராக எடுக்கப்படுவதால், டிஆர்பியில் இந்தத் தொடரும் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகளே என் மருமகளே தொடர் நிறைவடைந்ததால், நாகினி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The new episode of the Naagin series will air on Vijay TV from today (March 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.