தற்போதைய செய்திகள்

முடிகிறது வானத்தைப்போல தொடர்: ஈரமான ரோஜாவே நாயகியின் புதிய சீரியல்!

நடிகை ஸ்வாதியின் மூன்று முடிச்சு தொடர் குறித்த அறிவிப்பு.

DIN

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுவரும் வானத்தைப் போல தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைவதால், ஈரமான ரோஜாவே தொடர் நாயகி ஸ்வாதியின் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆம் பாகம் எடுக்கப்பட்டது.

இதில், நடிகை ஸ்வாதி பிரதான பாத்திரத்தில் நடித்தார். நாயகன் திரவியம் உடன் ஸ்வாதி நடித்த காதல் காட்சிகளுக்குத் தனி ரசிகர்கள் இருந்தனர்.

ஈரமான ரோஜவே தொடர் நிறைவடைந்த நிலையில், எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்வாதி, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான மூன்று முடிச்சு தொடரில் நாயகியாக நடிக்கிறார்.

ஸ்வாதிக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடிக்கிறார். இவர் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புதுப்புது அர்த்தங்கள், மந்திரப் புன்னகை ஆகிய தொடரில் நாயகனாக நடித்தவர்.

வானத்தைப்போல தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும், மூன்று முடிச்சு தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT