நினைத்தாலே இனிக்கும் தொடர் நாயகியான ஸ்வாதி சர்மாவுடன் மோதலும் காதலும் தொடர் நடிகரான சமீர் இணைந்து நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட தொடர் மோதலும் காதலும் சீரியல்.
இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சமீர். இதனைத் தொடர்ந்து இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூங்காற்றுத் திரும்புமா தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தத் தொடர் கடந்த ஜன. 3 ஆம் தேதி 183 எபிசோடுகளுடன் முடிவடைந்தது. பூங்காற்றுத் திரும்புமா தொடரில் இவருக்கு ஜோடியாக முத்தழகு தொடர் நாயகி ஷோபனா நடித்திருந்தார்.
இரண்டு தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான சமீர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்தப் புதிய தொடரில் சமீருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி சர்மா நடிக்கவுள்ளார். நடிகை ஸ்வாதி சர்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
இதனைத் தொடர்ந்து, இவர் சின்ன மருமகள் தொடரில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார்.
நடிகர் சமீர், ஸ்வாதி சர்மா ஆகிய இருவரும் புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளது, அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவர்கள் நடிக்கும் புதிய தொடரின் பெயர், முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.