கெட்டி மேளம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!
கெட்டி மேளம் தொடரில் மதன் பாண்டியன் இணைந்துள்ளார்.
கெட்டி மேளம் தொடரின் புதிய பாத்திரத்தில் சண்டக்கோழி தொடர் பிரபலம் நடிகர் மதன் பாண்டியன் இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
லக்ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், சாயா சிங், ஸ்ரீகுமார் , விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு சூர்யன் நடித்து வந்தார். ஆனால், கெட்டி மேளம் தொடரிலிருந்து சிபு சூர்யன் விலகினார்.
இதனால், அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். செளந்தர்யா ரெட்டிக்கு ஜோடியாக விராட் நடித்து வருகிறார்.
சொந்தமாக வீடு கட்டி மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க நினைக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கதையாக இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், தொடரின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக புதிய பாத்திரத்தை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது. சத்யா என்ற புதிய பாத்திரத்தில் நடிகர் மதன் பாண்டியன் நடிக்கிறார்.
நடிகர் மதன் பாண்டியனின் வருகை தொடரில் பல திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமான நடிகர் மதன் பாண்டியன், ஆஃபீஸ், ரெக்கை கட்டி பறக்குது மனசு, சண்டக்கோழி, அபி டெய்லர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கெட்டி மேளம் தொடரில் நடிகர் மதன் பாண்டியனின் வருகை தொடரில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, டிஆர்பி புள்ளிகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கெட்டி மேளம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Actor Madhan Pandian, popular for the Sandakozhi series, has joined the Ketti Melam series in a new role.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.