முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 7:51 PM
கோப்புப்படம் - DIN
பகிர்:
Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 7:45 PM

இந்த வாரம் திரையரங்குகளில் தங்கலான், டிமாண்டி காலணி -2, ரகுதாத்தா ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆக.16-ல் வெளியாகிறது.

Advertisement

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 7:45 PM

இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வேற மாறி ஆபிஸ் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் நடித்த கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(ஆக. 16) வெளியாகிறது.

மனோரதங்கள் ஆந்தாலஜி வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.