சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை இன்று(ஆக. 17) பவுனுக்கு ரூ.860 உயர்ந்து ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைப்பு காரணமாக அதன் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சா்வதேச காரணிகளால் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை(ஆக.17) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ. 53,560-க்கும், கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 6,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.91-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2000 உயர்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.
ஆவணி மாதம் முதல் நாளிலே தங்கம் விலை உயர்ந்துள்ள வருவது திருமண நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.