மாரி செல்வராஜின் வாழை படத்தின் டிரைலர் அறிவிப்பு!
மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்தப் படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. மேலும், இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள்.
முன்னதாக, இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், வாழை படத்தின் டிரைலர் நாளை(ஆக. 19) வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.