ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா படத்தின் பூஜை தொடக்கம்!
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 6) முதல் தொடங்கியது.
இந்தப் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்தப் பூஜையில் அனிருத், ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
கண்ணா ரவி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டெஸ்லா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கவிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத் தலைப்பு டீசர் சமீபத்தில் வெளியானது.
சினிமா பாரடைசோ, தி லாஸ்ட் ஷோ போன்ற படங்களின் பாணியில் சினிமா மீதான சிறுவன் ஒருவனின் ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள இப்படத்தின் தலைப்பு டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
The journey of Texla begins! aishwarya Rajinikanth new film update.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.