திரைக்கதிர்
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் எந்த விஷயம் குறித்தும் வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்காதவர்.
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் எந்த விஷயம் குறித்தும் வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்காதவர். திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னாள் பாலிவுட் உலகம் எதிர்க்கொள்ளும் சிக்கல் குறித்தும் அடிக்கடி பேசி வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கூறும்போது, 'அதிகாரத்தில் இருப்பவர்களுடன் திரைத்துறையினர் வளைந்துகொடுக்கும் சமரசங்களே ஹிந்தித் திரையுலகின் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம்.
அதேவேளையில், தென்னிந்தியத் திரையுலகம் இதுபோன்ற அழுத்தங்களுக்கு அவ்வளவு எளிதில் பலியாவதில்லை. தென்னிந்தியத் திரைத்துறை தனது வலுவான கலாசார அடையாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதே இதற்கு முக்கியக் காரணம். தென்னிந்தியத் திரைத்துறையானது பாலிவுட்டை சார்ந்திருக்காத வரை, அது தன் தனித்துவமான தன்மையை எப்போதும் இழக்காது' என்றார்.
Advertisement
Advertisement
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது 'புஷ்பா 2' திரைப்படம். இந்தப் படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் அதிகரித்திருக்கிறது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் பெண் வேடமிட்டு அல்லு அர்ஜுன் ஜாத்ராவில் (திருவிழா) நடனமாடுவார்.
அதுகுறித்து அண்மையில் அல்லு அர்ஜுன் பேசும்போது, 'நீங்கள் சேலை அணிந்து பெண் வேடத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். தொடக்கத்தில் இந்த யோசனையைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. சேலை அணிந்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் மாஸ் மற்றும் கம்பீரம் குறையக்கூடாது என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். அதுவே படத்தின் மிகப் பெரிய பலமாக மாறியது' எனக் கூறியிருக்கிறார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' உருவாகி இருக்கிறது. கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ், 'பல வருடங்கள், பல போராட்டங்களைக் கடந்து, என்னுடைய 100-ஆவது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் நிற்கிறேன். இதனை நினைக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். கடந்து வந்த பாதையில் சாவல்கள், ஏமாற்றங்கள் எல்லாம் நிறைந்திருக்கிறது' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.