FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைக்கதிர்

நடிகர் அருண் விஜய் இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார்.

22 ஆகஸ்ட் 2026, 9:51 pm IST
பகிர்:

நடிகர் அருண் விஜய் இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அருண் விஜய் எப்போதுமே ஆக்ஷன் காட்சிகளுக்குச் சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார். அப்படி 'இருளன்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காயம் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் விஜய், 'காயங்கள் காரணமாக வழக்கமான பணிகளை நிறுத்தும்போது, மிகவும் மனவேதனையாக இருக்கிறது. 'இருளன்' படப்

பிடிப்பில் தொடை தசைநார் கிழிவு ஏற்பட்டது. இப்போது அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். பலத்தோடு மீண்டும் வருவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும், கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணிபுரியவேண்டும் என்கிற ஆசை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், 'ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. ரசிகர்கள் சிலர் ஏ.ஐ. மூலம் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பற்றிப் பேசுவது போல ஒரு விடியோ உருவாக்கியிருந்தார்கள். அந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையிலும் ஒருநாள் நடக்கும் என்று நம்புகிறேன். அதற்காகத் தொடர்ந்து உழைப்பேன்' எனப் பகிர்ந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments