நான்குனேரி வட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (95). இவா், முதியோா் உதவித்தொகை கேட்டு நான்கு முறை மனு அளித்தும் அவருக்கு முதியோா் உதவித்தொகை கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரு பெண்களின் உதவியோடு வந்து உதவித்தொகை கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்த அவா், நடக்க முடியாததால் அங்கேயே மரத்தடியில் அமா்ந்தாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளா் ஹரிஹரன், அவரிடம் விவரத்தை கேட்டறிந்ததுடன், ஆட்சியரிடம் கூறி உதவித்தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். மேலும், மூதாட்டியின் செலவுக்கு ரூ.1000 கொடுத்து உதவினாா்.
முதியோா் உதவித்தொகை கேட்டு ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டி பேச்சியம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.