கோப்புப்படம் DIN
தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: மீண்டும் அவகாசம்கோரும் சிபிசிஐடி!

புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மீண்டும் அவகாசம்கோரும் சிபிசிஐடி காவல் துறையினர்.

DIN

வேங்கைவயல் விவாகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று மீண்டும் சிபிசிஐடி காவல் துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்தது 2022, டிசம்பா் 26-ஆம் தேதி தெரியவந்தது. தற்போது இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குரைஞா்கள் மாா்க்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தனித்தனியாக தாக்கல் செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணையின்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்தும், போலீஸாரால் ஒருவரைக்கூட கைது செய்ய முடியாதது ஏன்? மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு, மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT