நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து-இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். 
தற்போதைய செய்திகள்

நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து-இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தனியார் பள்ளி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் அழகர்கோயிலில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் பேருந்து வியாழக்கிழமை காலை நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோயிலுக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது முடக்குச்சாலை பகுதியில் தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த லிங்கவாடிச் சேர்ந்த முருகன் (40) மனைவி பஞ்சு (35), மகன் ஸ்ரீதர்(6) ஆகியோர் தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பலியாகினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நத்தம் காவல் துறையினர் 3 பேர்களின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

SCROLL FOR NEXT