அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வருவது போல விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு(AI) நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள் பாடல் பாடுவது போன்று பல பொழுதுபோக்கு விடியோக்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு தொழில்நுட்ப பிரியர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், புகைப்படங்களின் முகத்தை மாற்றுதல், ஒருவரின் குறலை மாற்றி வேறொருவர் போல பாடுதல், பேசுதல், 2டி படத்தை 3டி ஆக மாற்றுதல் போல அனைத்து வேலைகளிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இணையதளவாசி ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க்கை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த விடியோவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா, மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க், போப் ஆண்டவர், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வணிக வளாகத்துக்குள் செல்வது போலவும் அவர்களை அமெரிக்க காவல்துறை கைது செய்வது போலவும் அந்த விடியோவில் ஏஐ மூலமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே விடியோவில் அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் ராணுவத்தில் பயன்படுத்தக் கூடிய எம்16 ரகத் துப்பாக்கியுடன் மக்களை மிரட்டுவது போலவும் விடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் ஒரு பச்சோந்தியை கையில் வைத்துக்கொண்டு பேஸ்பால் மட்டையுடன் இருப்பது போலவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து மக்களை மிட்டுவது போலவும், போப் ஆண்டவர் இரண்டு கைகளிலும் இரண்டு துப்பாக்கிகளுடனும் விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விடியோ இதுவரையிலும் 5 லட்சத்துக்கும் அதிமானோரால் பார்க்கப்பட்டு இருக்கிறது. இதுஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும் மற்றொருபுறம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.