முகப்பு
உலகம்

ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Updated On : 7 மார்ச், 2026 at 7:53 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது - AP Photo
பகிர்:

ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் இன்று (மார்ச் 7) எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Advertisement

இது குறித்து, டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் சனிக்கிழமை(மார்ச் 7) வெளியிட்ட பதிவொன்றில், “இன்று, ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும். ஈரானின் மோசமான செய்கையால், எதிர்வினையாக மேற்கண்ட நடவடிக்கை இருக்கப்போவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தமது அண்டை நாடுகளில் நடத்திய தாக்குதல்களுக்கு ஈராபிய அதிபர் மசூத் பெஸெஷ்கியான் சனிக்கிழமை பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டே, டிரம்ப் மேற்கண்ட எச்சரிக்கைப் பதிவை வெளியிட்டிருப்பதாகவும், ஈரானின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளும் தலைவர்களும் அமெரிக்காவின் தாக்குதல்களில் குறிவைக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

"Today Iran will be hit very hard!" Trump made the comments on his Truth Social website

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.