முகப்பு
உலகம்

ஈரானுக்காக அயராது உழைப்போம்; ஒரே தீர்வு சரணடைவது! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர நிபந்தனையின்றி சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அதிபர் டிரம்ப் அறிவிப்பு...

Updated On : 6 மார்ச், 2026 at 8:49 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

ஈரானின் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் நிபந்தனையற்ற சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், ஈரான் நிபந்தனைகளின்றி சரணடைவது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வு எனவும், ஈரானின் வளர்ச்சிக்காக அயராது உழைப்போம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. அதன்பிறகு, ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்களின் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் ஈரானை அழிவின் விளிமில் இருந்து மீட்க அயராது பாடுபடுவோம்.

ஈரானை பொருளாதார ரீதியாக முன்பை விட சிறந்ததாகவும், வலிமையாகவும் மாற்றுவோம். ஈரானை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள் (மேக் ஈரான் கிரேட் அகயின்)” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 அன்று மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

US President Donald Trump has declared that unconditional surrender is the only solution to end the war on Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.