தமிழக வெற்றிக் கழக (தவெக) கொடி 
தற்போதைய செய்திகள்

கட்சிக் கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

DIN

சென்னை: பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) கொடியை ஏற்றிய அந்த கட்சியின் தலைவர் விஜய்

கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் "தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பிறக்குது" எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT