வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை. DIN
தற்போதைய செய்திகள்

நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

DIN

திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான ஆவிச்சிப்பட்டி அருகே பூலா மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் வெடி தயாரிக்கும் பணியில் சிவகாசியை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.

இந்நிலையில், வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விருந்து வந்த நத்தம் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உடல் சிதறி பலியானதில் இறந்தவர்களின் விபரம் குறித்து அடையாளம் காண முடியவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

விசாரணை மேற்கொள்ளும் போலீஸார்.

பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலை மறைவாகி விட்டதால் அவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் துணை கண்காணிப்பாளர் முருகேசன், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான 20 க்கும் மேற்பட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT