பாரீஸ் பாராலிம்பிக்: ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தேவி!
பாரீஸ் பாராலிம்பிக்கில் ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டார் ஷீத்தல் தேவி.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில், இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி ஒரே ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.
பாராலிம்பிக் வில்வித்தை போட்டி தரவரிசைச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி பாரா விளையாட்டுகளின் சாதனை மற்றும் உலக சாதனையை முறியடித்து 703 புள்ளிகளைப் பெற்றார்.
தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். ஓஸ்னூர் க்யூர் மற்றும் ஷீத்தல் தேவி ஆகிய இருவரும் ஜெசிகா ஸ்ட்ரெட்டன் (694 புள்ளிகள் , ஃபோப் பேட்டர்சன் (698 புள்ளிகள்) ஆகியோரின் முந்தைய சாதனைகளை முறியடித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.