அண்ணாமலை, ஹெச். ராஜா  DIN
தற்போதைய செய்திகள்

லண்டன் சென்ற அண்ணாமலை: ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

தமிழக பாஜக கட்சிப் பணிகளை மேற்கொள்ள, ஹெச். ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு.

DIN

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் ஃபெல்லோஷிப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அவர் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கிப் படிக்கவுள்ளார். அவர் இல்லாத நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின் பேரில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக கட்சிப் பணிகளை மேற்கொள்ள, ஹெச். ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் எம். சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் எம். முருகானந்தம், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், பொருளாளர் எஸ். ஆர். சேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது மாநில மையக்குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்சியின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.

ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எடுக்கும் முடிவுகளை வைத்து ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT