சென்னையில் தங்கம் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 6,695-க்கும் , பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,560-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.92-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 92,000-க்கும் விற்பனையாகிறது.