கொலை செய்யப்பட்ட ரமேஷ். 
தற்போதைய செய்திகள்

அவிநாசி: நடைப்பயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை

அவிநாசியில் நடைப்பயிற்சி சென்றவர் வெட்டிக் கொலை.

DIN

அவிநாசி: அவிநாசியில் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (47), நான்கு சக்கர வாகனம் கார் விற்பனை தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி வித்யா, இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்

இந்நிலையில் இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அவிநாசி மங்கலம் சாலை புறவழிச்சாலை அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலைவெறித் தாக்குதலுடன் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பலியானார்.

நடைப்பயிற்சி சென்றவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT