தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர். 
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூர்: சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன் (27), அய்யம்பேட்டை இரட்டை தெருவை சேர்ந்த குமார் (29) என்பவரும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் வீட்டை இடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி இரண்டு தொழிலாளர்களும் பலியாகினர்.

தகவல் அறிந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT