முகப்பு
தற்போதைய செய்திகள்

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 7:57 AM
முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்காணித்து சீரமைத்திட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

ஃபென்ஜால் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்றுக் கொண்டிருக்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். 

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் சு. முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர். ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். 

இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →