முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்: அன்புமணி ராமதாஸ்
ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று அன்புமணி பேசியது...
மதுரை: ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், மதுரையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இரண்டாவது பொதுக்கூட்டம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய, மாநில இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கான வளா்ச்சியை காண முடியும்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் வளா்ச்சியும், அடிப்படை கட்டமைப்பும் கிடைக்கும். தான் சார்ந்த இயக்கத்திற்கும், கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் துரோகம் செய்தவா்கள் தான் தற்போது திமுகவில் இணைந்து வருகிறாா்கள். எத்தனை போ் சோ்ந்து என்ன செய்தாலும் பரவாயில்லை. எண்ணிக்கை பெரிதல்ல. தரம்தான் பெரிது. அதனால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பாா்கள்.
Advertisement
Advertisement
எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு இன்னும் பலம் வந்து சேரும். ஐந்தாண்டு காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்று அவர் கூறினார்.
Chief Minister Stalin is living in fantasy says Anbumani Ramadoss
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.