முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர், ஆளுநர் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...

Updated On : 1 மார்ச், 2026 at 11:26 AM
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:51 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On : 1 மார்ச், 2026 at 10:58 AM

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஆளுநர் ஆர்.என். ரவியின் வாழ்த்துச் செய்தியில், ”முதல்வர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Updated On : 1 மார்ச், 2026 at 11:23 AM

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் உங்கள் தலைமையே இன்னும் பல சாதனைகளை உருவாக்கட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi, Governor R.N. Ravi and political party leaders are extending their greetings to Tamil Nadu Chief Minister Stalin on his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.