ஒகேனக்கல் அருவி 
தற்போதைய செய்திகள்

எச்சரிக்கை! ஒகேனக்கல், சிறுவாணி அணை செல்வோர் கவனத்துக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல், சிறுவாணி பகுதிகளுக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.

DIN

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல், சிறுவாணி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது.

இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்த நிலையில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்தது.

தற்போது சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சமூக வலைதள பக்கத்தில்,

'மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஒகேனக்கல், சிறுவாணி அணை மற்றும் பிற அணைப் பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

SCROLL FOR NEXT