ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்! படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ்.

DIN

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக மும்பையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்.

மகாராஷ்டிரா முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பாா்வையாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டணித் தலைவா்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனிடையே, முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் நாளை(டிச. 8) பதவியேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக சூ.கி.எட்வின் பொறுப்பேற்பு

குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

மனிதநேயத்தோடு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் ரா. அழகுமீனா

கோவில்பட்டியில் வியாபாரி கொலை

சாத்தான்குளம் ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT