முகப்பு
தற்போதைய செய்திகள்

8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: முதல்வர் ஸ்டாலின்

காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்.

Updated On : 5 டிசம்பர் 2024, 12:09 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். கால நிலை மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட இந்த குழுதான் இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல் குழுவாகும்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெய்தல் மீட்பு திட்டம் மூலம் 1,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகளை உருவாக்கி வருகிறோம். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments