திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கியதாக நான்கு எஸ்எஃப்ஐ தலைவர்களின் மீது கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் குன்னியூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரும் எஸ்எஃப்ஐ உறுப்பினருமான முஹம்மது அனஸை, கடந்த திங்கட்கிழமை மாணவத் தலைவர்களான அமல் சந்த், மிதுன், ஆலன் ஜமால் மற்றும் விதூ உதய் ஆகியோர் கல்லூரியிலுள்ள எஸ்எஃப்ஐ அறையில் வைத்து தாக்கியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவர் அனஸை கொடிக்கம்பத்தில் ஏற சொல்லியுள்ளார். அப்பொழுது தனது இயலாமையின் காரணமாக அனஸ் அதைச் செய்ய மறுத்ததினால் கோவமடைந்தவர்கள் மற்ற மாணவர்கள் முன்னிலையில் இவரைத் தாக்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அனஸ் அக்கல்லூரியின் எஸ்எஃப்ஐ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அந்த தாக்குதலின்போது இவரது காலில் ஒருவர் ஏறி மிதித்தாகவும் அந்த அறையிலிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்ற போது அவர்கள் இவரை இரும்பு கம்பியால் அடித்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் காலை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும், தாக்கப்பட்ட மாணவர் அனஸ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்நால்வரின் மீதும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து பேசிய காவல் துறையினர், மாற்றுத்திறனாளி மாணவரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் நோக்கம் என்னவென்பது விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால், அரசியல்வாதிகளின் அழுத்தினால் இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்று கேரள மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.