பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்!

இந்த வாரம் வெளியேறிய 2 போட்டியாளர்கள் யார்?

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய 2 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் போடப்பட்ட கோடு எடுக்கப்பட்டதில் இருந்து, அவரவர் தங்களது தனிநபர் விளையாட்டை ஆடி வருகின்றனர். இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இந்த வாரம், ஏஞ்சல்கள், டெவில்கள் டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏஞ்சல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களை, டெவில்கள் கோபமடைய வைத்தால், ஏஞ்சல்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டார் பறிக்கப்படும்.

ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும். இதில், போட்டியாளர்கள் மத்தியில் கடும் சச்சரவு நிலவியது. சில இரக்கமற்ற செயல்களில் சாச்சனா, மஞ்சரி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9 வாரங்களை கடந்துள்ள நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இரு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

அதன்படி, சாச்சனா மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி ஆகியோர் பிக் பாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இருவர் வெளியேறிய நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி சுரேஷ், ரியா, சிவக்குமார் ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT