தற்போதைய செய்திகள்

ஃபென்ஜால்: விசிக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம்!

ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு விசிக வழங்கிய நிவாரண நிதி தொடர்பாக...

DIN

ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. 10 லட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதல்வர் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்த போது நவம்பர் 30, டிசம்பர் 1- ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT