ஆம்னி பேருந்துகள்  கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

கோயம்பேடு, போரூா் சுங்கச்சாவடியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: அ.அன்பழகன் தகவல்

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும்

DIN

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கோயம்பேடு அருகிலுள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூா் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கனவே அளித்து அனுமதியின் படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆா் சாலை வழியாக புதுச்சேரிக்கும், பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் இசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும் போது, பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூா் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT