திருவண்ணாமலை மகா தீப மலையின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால், பக்தா்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்பதை ஆராய புவியியல் வல்லுநா் குழுவின் ஆய்வு தொடங்கியது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் நாளன்று காலை 2,500 பக்தா்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கி 2,668 அடி உயர மலையின் உச்சிக்குச் செல்ல அனுமதி அளிப்பது வழக்கம்.
இந்த நடைமுறையை நிகழாண்டும் பின்பற்றுவது எனவும், கூடுதலாக மலையேறும் பக்தா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உடல்தகுதியை பரிசோதித்த பிறகு அனுமதி அட்டைகள் வழங்குவது என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.
ஆனால், மகா தீப மலையின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால், மலையேற அனுமதிப்பது தொடர்பாக, புவியியல் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், புவியியல் வல்லுநர் குழு ஆய்வு செய்தபிறகே, காா்த்திகை தீபத் திருவிழா அன்று 2500 பேருக்கு அனுமதி குறித்து தெரிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக மகா தீப மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.