கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

உறவினர் மீது கொலைவெறித் தாக்குதல், 19 வயது இளைஞர் கைது!

ஒடிசாவில் உறவினரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய 19 வயது இளைஞர் கைதானதைப் பற்றி..

DIN

ஒடிசா: கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்காம்பூர் நகராட்சியில், உறவினரைத் தாக்கி அவரிடமிருந்த பணத்தை திருடிய 19வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது உறவினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த பன்ஜா கிஷோர் நந்தா என்பவரின் மனைவி மந்தகிரி எனும் ஊரில் ஆசிரியராக பணியாற்றிவரும் நிலையில், நந்தா அவரது 12 வயது மகன் மற்றும் தனது உறவினரான மண்டியப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த 19 வயதுடைய சந்தன் பிஸ்வாலுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 24 ஆம் தேதி சந்தன் தனது உறவினரான நந்தாவின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 50,000 ரூபாய் பணத்தையும் மற்ற விலைமதிப்புள்ள பொருட்களையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தலையில் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் எம்.கே.சி.ஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால் அங்கிருந்து அவர் எஸ்.சி.பி.எம்.சி பொது மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இருப்பினும், நந்தாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் பற்றி தெரியவந்தவுடன் நந்தாவின் மனைவி சஞ்சுக்தா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினரால் சந்தன் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பெர்காம்பூர் எஸ்பி சரவணவிவேக் கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தன், நந்தனிடமிருந்து திருடிய ரொக்கப்பணமும் மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் திருடிய மூன்று இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT